(அ) கூட்டுறவு சங்கங்களில் எல்லா சேவையாளர்களையும் சேர்த்துக் கொள்வதும் உயர்வினை

வழங்குவதற்காக உரிய சேவை உடன்படிக்கையும் கோட்பாட்டுடனான சேவைத் திட்டத்தினை தீர்மானித்தல்

(ஆ) தேவையான போது கூட்டுறவு சேவையாளர்களை சேர்த்துக் கொள்வதற்கு உரிய

பரீட்சை நடாத்தலும் அந்த பரீடசைக்கான கட்டணத்தை தீர்மானித்தல்

(இ) கூட்டுறவு சங்கங்கத்தில் எந்த ஒரு பதவிக்கும் நியமிப்பதற்காக இருக்க வேண்டிய தகைமையை தீர்மானித்தல், எந்த ஒரு வகுப்பிற்கு அல்லது தரத்தின் பதவிக்கு அல்லது பதவிகளுக்கு உரிய சம்பளத் திட்டத்தை தீர்மானித்தல், காலத்திற்கு காலம் அவ்வாறு தீர்மானித்த சம்பளத் திட்டத்தை திருத்தியமைத்தல், அது போன்று ஆணையாளரை விசாரித்து அவ்வாறான காரணம் பற்றி தீர்மானித்தல்

(ஈ) ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படுகின்ற சம்பளத் திட்டப்படி சம்பளம் செலுத்துமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டளையிடல்

(உ) கூட்டுறவு சங்கங்கத்தினால் உரிய சேவையாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய சேவைத் திட்டத்தினை உறுதிப்படுத்தல். அதனை நடாத்துவதற்காக அதிகாரத்தை தீர்மானித்தலும் தீர்மானிக்கப்பட்ட கால எல்லையினுள் ஒழுக்காற்று பரிசீலனையை நடாத்தி முடிக்குமாறு சங்கங்களுக்கு அறிவித்தல்

(ஊ) எந்தவொரு கூட்டுறவு சங்கங்களினாலும் எடுக்கப்படும் ஒழுக்காற்று தீர்மானத்தை காரணமாக கொண்டு எழுப்பப்படும் முறையீடுகளை பரிசீலித்தல்.

(எ) உரிய சேவையாளர்கள் பற்றி கூட்டுறவு சங்கங்கத்தினால் வைத்துக் கொள்ள வேண்டிய அறிக்கை எது என்பதனை தீர்மானித்தல்

(ஏ) எந்தவொரு கூட்டுறவு சேவையாளர்கள் பற்றியும் ஆணைக் குழுவிற்கு தேவை ஏற்படும் கோவைகள் வேறு ஆவணங்கள் மற்றும் விபரங்கள் அடங்கிய அறிக்கை குறித்த திகதிக்கு முன் ஆணைக் குழுவிற்கு அறிவிப்பதற்கு முறையீட்டு பரிசீலனை உத்தியாகத்தர் அல்லது உத்தியோகத்தர் குழுவினை பெயர் குறிப்பிடல்.

(ஐ) தமது நடத்தை ஒழுக்காற்று பரிசீலனையின் விடய காரணமாக இருக்கும் ஏதாதொரு சங்கத்தின் சேவையாளரினால் அந்த சங்கத்தினால் கொடுக்கப்பட்ட ஒழுக்காற்று கட்டளைக்கு எதிராக ஆணைக்குழுவிற்கு முறையீடு செய்துள்ள சந்தர்ப்பத்தில் அந்த முறையீட்டினை கவனத்தில் கொண்டு சங்கத்தினால் செய்யப்பட்ட தீர்மானத்தை வேறுபடுத்துவதற்கு, தளர்த்துவதற்கு, இரத்துச் செய்வதற்கு அல்லது அதற்காக தீர்மானம்

எடுப்பதற்கு அல்லது மீண்டும் பரிசீலனை நடாத்துமாறு கட்டளை இடுவதற்கு அல்லது அவ்வாறான சேவையாளரை மீண்டும் சேவைக்குட்படுத்தல் உற்பட ஆணைக் குழுவினால் செய்யப்படும் கட்டளை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறும் ஒரு தினத்தில் அல்லது குறிப்பிடப்படும் திகதிக்கு நடைமுறைப்படுத்துமாறு கூட்டுறவு சங்கத்திற்கு கட்டளையிடல்.

(ஒ) ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அல்லது வேறு காரணத்திற்காக சேவையாளர் ஒருவரின் சேவையை முடிவுறுத்தும் போது தேவையாயின் மாத்திரம் சம்பளம் அல்லது வேறு பிரதிலாபம் சேவையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் பற்றிய கொளகையனைத் தீர்மானித்தல்

(ஓ) அமைச்சரினால் அமைக்கப்பட்ட சட்டதிட்டத்தினால் தீர்மானிக்கப்படுகின்ற ஏதாதொரு தொகை வைப்பிலிடுமாறு முறையீட்டாளருக்கு கட்டளையிடுவதற்கும் முறையீடு பரிசீலனை முடிவில் உரிய வைப்புத் தொகையை தடுத்து வைப்பதற்கு அல்லது மீள்செலுத்துவதற்கு தீர்மானித்தல்

 

CHAIRMAN